புதுவையில் அடுத்தடுத்து செத்து மடிந்த 400 வாத்துகள்; காவல் துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Feb 16, 2023, 12:20 PM IST

புதுச்சேரி அடுத்த ரெட்டிசாவடியில் மேச்சலுக்கு விடப்பட்ட 400 வாத்துக்கள் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாத்துகளுக்கு யாராவது விஷம் வைத்தார்களா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரி ரெட்டிச்சாவடி அடுத்த மேல் அழிச்சிப் பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா. இவர் தன் குடும்பத்துடன், சுமார் 1500 க்கும் மேற்பட்ட வாத்துகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று சேலியமேடு வயல்வெளியில் வாத்துகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது இறை தேடி நின்று கொண்டிருந்த வாத்துக்கள் அரை மணி நேரத்தில், மயங்கி விழுந்து ஒவ்வொன்றாக பலியாகத் தொடங்கியது.

இதை பார்த்த மீனா அலறி அடித்து கொண்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்காக அழைத்தார்.  இதன் பேரில் விவசாயிகள் ஓடிவந்து பார்த்தனர். வாத்துகளை காப்பாற்ற அவர்களுக்கு தெரிந்த முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும் நானுருக்கும் அதிகமான வாத்துகள் அடுத்தடுத்து இறந்தன.

Latest Videos

பின்னர் இதுகுறித்து  பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதன் பேரில் காவல் துறையினர் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது 400-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்து போனதை உறுதி படுத்திக் கொண்டனர். இதையடுத்து இறந்த வாத்துகளை, புதுச்சேரி கால்நடை துறைக்கு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாகூர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் வாத்து மேய்ந்த இடத்தில் யாராவது விஷம் வைத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

click me!