குறைந்த வட்டியில் பல கோடி கடன் வழங்குகிறோம் என்று தொழிலதிபர்களை குறி வைத்து தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய்க்கு மோசடி செய்த திருப்பூர் கும்பலை கைது செய்து புதுச்சேரி சைபர் கிரைம் காவல் துறையினர் நடவடிக்கை.
புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் மத்திய படை அதிகாரியை தொடர்பு கொண்ட நபர் நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறீர்கள் அதற்கு நாங்கள் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம். ஒரு கோடி ரூபாய் கடன் வழங்க தமிழ்நாடு பத்திரம் பெயர் இல்லாமல் 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி தர வேண்டும். நீங்கள் கடனை திருப்பி அடைத்தவுடன் உங்களுக்கு அந்த பத்திரத்தை தந்து விடுவோம்.
வேறு எந்த நிபந்தனையும் கிடையாது என்று பேசி கடந்த மாதம் 25ம் தேதி திருவண்ணாமலை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரவழைத்து அவரிடம் ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த கும்பல் தலைமறைவானது. அவர்களை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தருமாறு அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக புதுச்சேரி காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கடந்த ஒரு மாதங்களாக கண்காணித்து வந்தனர். மேலும் மோசடிக்காரர்கள் பயன்படுத்திய அனைத்து செல்போன்களும் குற்றச் சம்பவத்தை முடித்துவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மேற்கொண்டு விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. பல்வேறு சைபர் tool ஒத்துழைப்புடன் குற்றவாளிகளை கண்காணிக்கையில் அனைவருமே திருப்பூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
அவர்களில் மூன்று பேரை நேற்று இரவு சேலத்தில் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் திருப்பூர் காளிபாளையம் பஞ்சாயத்து, குருவாயூரப்பன் நகரில் வசிக்கும் செல்வராசு என்பவன் இந்த மோசடி கும்பலுக்கு தலைவராக இருந்து செயல்பட்டது தெரியவந்தது.
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; இனி குடிநீர் கேன் எடுத்துவர தடை
மேலும் இந்த குழுவில் உள்ள ஒருவர் தமிழகத்தில் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முக்கிய நபர்களை கணக்கெடுத்து அவர்களை தொடர்பு கொள்கிறது. தமிழ்நாடு அரசின் பத்திரம் பெயர் போடாமல் உங்களுக்கு கொடுக்கின்ற கடன் தொகையில் 10% எங்களுக்கு வாங்கி கொடுக்க வேண்டும். அப்படி நீங்கள் வாங்கிக் கொடுத்த அடுத்த இரண்டாவது நாள் உங்களுக்கு நாங்கள் சொன்ன தொகையை தந்து விடுவோம் என்றும், மேலும் பணம் தயாராக இருப்பது போன்ற வீடியோக்களையும் அனுப்புவார்கள்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஓட ஓட வெட்டி கொலை
இதுபோல் காஞ்சிபுரம் சென்னை புதுச்சேரி விழுப்புரம் சேலம் நாமக்கல் திண்டுக்கல் கோயம்புத்தூர் திருச்சி கரூர் பெங்களூர் கேரளா ஆகிய பல்வேறு நகரங்களில் 10 கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு நபர்களை இந்த கும்பல் மோசடி செய்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த மோசடி கும்பலை சேர்ந்த ஒரு பெண் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்களை புதுச்சேரி காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போதைய சூழலில் குழுவை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.