மொழி மீது கொண்ட ஈர்ப்பால் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதி

Published : Feb 11, 2023, 01:05 PM IST
மொழி மீது கொண்ட ஈர்ப்பால் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு தம்பதி

சுருக்கம்

புதுச்சேரி அடுத்த ஆரோவில்லில் தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட காதலால் தமிழ் முறைப்படி வெளிநாட்டு தம்பதிகள் திருமணம் செய்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் மைக்கேல் என்பவரின் மகன் அலன். வயது 28. இவரும் இங்கிலாந்தைச் சேர்ந்த 28 வயது லியோவும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்.  இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரோவிற்கு வந்த இவர்கள் இங்கேயே தங்கி அலன் ஆரோவில்லில் விவசாயம் செய்து வருகின்றனர். லியோ ஆரோவில்லில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழ் மீது கொண்ட தீராத காதல் காரணமாக தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி  உடைகள் அணிந்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதன்படி, ஆரோவிலில் உள்ள ஒரு பள்ளியில் தமிழர்கள் முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மாங்கல்யம் கட்டி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு உணவும், தமிழ் முறைப்படி தாம்பூலமும் வழங்கப்பட்டன.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி இல்லை..! கெஞ்சிப் பார்த்த தவெகவினர்..! கையை விரித்த புதுவை முதல்வர்!
விஜய்யின் பேர கேட்டாலே நடுங்கும் ஆளும் கட்சி.. புதுவையில் ரோட் ஷோவுக்கு அனுமதி வழங்க தயங்கும் அரசு..