புதுச்சேரி ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் கரப்பான் பூச்சி, புழுக்கள் நெளிய நெளிய பரிமாறப்படும் உணவுகளை காண்பித்து முறையிடப்பட்டதால் அமைச்சர் அதிர்ச்சியடைந்தார்.
புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் கிருஷ்ணா நகர் பகுதியில் செயல்படும் பெண்கள் மகளிர் விடுதியில் மாணவிகள் உண்ணும் உணவில் கரப்பான் பூச்சி, புழு போன்றவை இருப்பதாக மாணவிகள் சிலர் வீடியோவாக புழு நிறைந்த உணவை வீடியோ எடுத்தும் போட்டோ எடுத்தும் வாட்ஸ் அப் மூலம் மாணவர் கூட்டமைப்புக்கு புகாரை தெரிவித்திருந்தனர்.
அந்த புகாரை அடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் சுவாமிநாதன், தலைவர் பிரவீன் உள்பட மேலும் சில மாணவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உண்மை அறிய மாணவிகள் விடுதிக்கு நேரடியாக சென்றனர். மாணவிகள் விடுதியில் நடத்திய ஆய்வில் மிக மோசமான நிர்வாக சீர்கேடு மற்றும் பல்வேறு அவலங்களை மாணவிகள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
undefined
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாணவிகளுக்கு அளிக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி, மற்றும் புழு நெளிய நெளிய உணவு பரிமாறியாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். மேலும் இரவு மீந்து போன உணவை காலையில் புளி கரைசலை கரைத்து புளி சாதம் என்ற பெயரில் விநியோகிப்பதாகவும் கூறி குற்றம் சாட்டினர். அது பல நேரங்களில் உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
மேலும் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கிப் பயிலும் அந்த விடுதியில் போதிய இடவசதி இல்லாததால் ஒரே படுக்கையில் மூன்று பேர் படுப்பதாகவும் பற்றாகுறைக்கு சமையல் அறைகளில் மாணவிகள் படுத்து தூங்கும் அவலம் நீடிப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
உயர்கல்வியில் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 27% உயர்வு - முதல்வர் பெருமிதம்
இதுகுறித்து தகவல் அறிந்த துறையின் அமைச்சர் சந்திர பிரியங்கா நேற்று மாணவிகள் விடுதியில் சோதனை செய்தார். அப்போது மாணவிகள் உணவில் புழு கிடந்ததையும் கரப்பான் பூச்சி கிடந்ததையும் புகைப்படமாக எடுத்து அவரிடம் காண்பித்தனர்.
ஒரே குடும்பத்தில் 5 பேர் கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி; 2 குழந்தைகள் பலி, 3 பேர் கவலைக்கிடம்
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விடுதி நிர்வாகிகளை அழைத்து விசாரித்தார். மேலும் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்கும் எனவும் அப்படி மீறி நடந்தால் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சந்திர பிரியங்கா எச்சரித்தார். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.