புதுச்சேரியில் கஞ்சா விற்பவர்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆதரித்து வருகிறார் என்றும், பாஜக கட்சியை சேர்ந்தவரே கஞ்சா விற்பனை செய்து வருகிறார்கள் என புதுவை காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சிறுமி கொலை- திசை திருப்ப முயற்சி
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், சிறுமியின் கொலை குற்றவாளி ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதாலும், அவர் ஏற்கனவே ஒரு இயக்கத்தில் இருந்தவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என தெரிவித்தார். இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர்,
சிறுமி கொலை குற்றத்தை திசை திருப்ப ஆட்சியாளர்கள் முயற்சி செய்வதாகவும், போதைப் பொருள்களை புதுவையில் இருந்து முழுமையாக அகற்ற இந்த அரசு வெளிப்படையான திட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் ஆப்ரேஷன் விடியலில் உள்ள போலீசாருக்கு என்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது, அவர்களுக்கு தொலைபேசி வசதி கிடையாது வாகன வசதி கிடையாது என குற்றம்சாட்டினார்.
கஞ்சா விற்பனைக்கு அமைச்சர் ஆதரவு
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் கஞ்சா விற்பவர்களை அமைச்சர் நமச்சிவாயம் ஆதரித்து வருகிறார் என்றும், பாஜக கட்சியை சேர்ந்தவரே கஞ்சா விற்பனை செய்து வருகிறார்கள் என்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்க குற்றச்சாட்டினார். மேலும் போதை பொருள் சம்பந்தமாக இரண்டு கொலை நடந்துள்ளது என்றும், இதுவரை ஆட்சியாளர்கள் திருந்தவில்லை என்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சியில் தான் கஞ்சா அதிகமாக விற்பனை செய்யப்பட்டது என்றால் அப்போது பொறுப்பு வகித்து அமைச்சராக இருந்த நமச்சிவாயம் எதற்காக ராஜினாமா செய்யவில்லை என்றும் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
திமுகவை களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் பாஜக.! அதற்கு அதிமுக துதி பாடுகிறது.. ரகுபதி விளாசல்