புதுவையில் திருநங்கைகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி பட்டறை! - 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்பு!

By Dinesh TG  |  First Published Jun 12, 2023, 10:17 AM IST

புதுச்சேரியில், திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், பைக் மெக்கானிக், செல்போன் பழுதுபார்த்தல், கணினி பழுது நீக்குதல் உள்ளிட்ட 16 வகையான தொழில்நுட்ப பயிற்சி பட்டறை நடைபெற்றது. ஆடல் பாடலுடன் தொடங்கிய பயிற்சி பட்டறையில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்றனர்.


புதுச்சேரி தன்னம்பிக்கை கலை குழு மற்றும் விவேகானந்தா ஊரக சமுதாய கல்லூரி இணைந்து திருநங்கைகளுக்கான ஒருநாள் தொழில் பயிற்சி பட்டறையை நடத்தியது. கனக செட்டிகுளம் விவேகானந்தா ஊரக சமுதாய கல்லூரியில் நடைபெற்ற தொழில் பயிற்சியில் புதுச்சேரியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இந்த தொழில் பயிற்சி தொடக்கத்தில் திருநங்கைகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாடலுக்கு திருநங்கைகள் நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.

அதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் திருநங்கைகளுக்கு பைக் மெக்கானிக், அழகு கலை, லேப் டெக்னீசியன், கணினி பழுது நீக்குதல், சிசிடிவி பழுதுபார்த்தல், பிளம்பிங், மோட்டார் மெக்கானிக், ஏசி, பிரிட்ஜ், மெக்கானிக், உள்ளிட்ட 16 வகையான தொழில்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட திருநங்கைகள் ஆர்வமுடன் பயிற்சியை கற்றுக் கொண்டனர். இந்த பயிற்சி பட்டறை குறித்து அவர்கள் கூறியதாவது, தங்களுக்கு வாழ்க்கையில் மேம்பட இது போன்ற பயிற்சிகள் இருப்பது இப்போதுதான் தெரியும் இதன் மூலம் தாங்கள் படித்து அரசு வேலைக்கு செல்வோம் என தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு அரசும் இந்த கல்லூரியும் கட்டண சலுகைகள் அளித்தால் மேலும் படித்து வாழ்க்கையில் முன்னேற உதவிகரமாக இருக்கும் என்றும் அவர்கள் கூறினர்.

மேலும் திருநங்கைகள் என்றால் பாலியல் தொழில் செய்வார்கள் யாசகம் எடுப்பார்கள் என்ற மடமை பேச்சை உடைத்து அவர்களும் வாழ்க்கையில் முன்னேற்ற வேண்டும் என்று அடிப்படையில் தொழிற் பயிற்சி கற்றுக் கொடுப்பதாக தன்னம்பிக்கை கலை குழு நிறுவனர் எலிசபெத் ராணி தெரிவித்தார்.

எனது மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்துள்ளார்கள்..! காப்பாற்ற கோரி வீடியோ வெளியிட்டு கதறிய ராணுவ வீரர்

Latest Videos

click me!