புதுச்சேரி நேற்று வெளியிடப்பட்ட காவலர் தேர்வு பட்டியலில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் காவலர் தேர்வில் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் நேற்று வெளியிடப்பட்ட காவலர் தேர்வு பட்டியலில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட செட்டிப்பட்டு கிராமத்தில் தற்போது 12 பேர் காவலர் பொது தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த விக்ரமன், தருண்குமார், புஷ்பராஜ், திருக்காமேஸ்வரன், சற்குணம், நந்தகுமார், அஜித்குமார், அஜித்குமார், துளசிதரன், பவதாரணி, கலையரசி ஆகிய இரண்டு பெண்கள் உட்பட 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
undefined
இதில் விக்ரமன் மாநிலத்தில் மூன்றாவது இடத்திலும், தருண்குமார் மாநிலத்தில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒரே குடும்பத்தில் சற்குணம், அஜித் குமார் ஆகிய இரண்டு பேர் அண்ணன் தம்பிகள் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் நந்தகுமார் என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் தற்போது புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகப் பகுதி காவல்துறையை ராஜினாமா செய்து புதுச்சேரியில் பணிபுரிய உள்ளதாக அவர் கூறினார்.
திண்டுக்கல்லில் பட்ட பகலில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை; அச்சத்தில் உறைந்த மக்கள்
கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்வில் ஏழு பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது போல் தொடர்ந்து நடைபெற்று வரும் காவலர் பொதுத் தேர்வில் தற்போது கிராமத்தில் 12க்கும் மேற்பட்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்று இருப்பது பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று படிப்படியாக இந்த செட்டிப்பட்டு கிராமம் போலீஸ் கிராமமாக மாறி வருகிறது. பல்வேறு சட்டத்துக்கு புறம்பாக இளைஞர்கள் மாறிவரும் சூழ்நிலையில் இது போன்று கூட்டாக காவலர் பொதுத் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவது சவாலாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். கிராமத்து மக்கள் இதைக் கண்டு பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பட்டியலின மக்கள் கோவிலுக்குள் வர எதிர்ப்பு; விழுப்புரத்தை தொடர்ந்து கரூரில் கோவிலுக்கு சீல்!