புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டிருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக மாநிலங்களவை எம்பி ஷக்திசின் கோஹிலும், அரியானா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவராக தீபக் பபாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!
புதுச்சேரியில் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் நமச்சிவாயம், முன்னதாக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்தார். அப்போது, அவரது தலைமையில் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியதில் நமச்சிவாயத்தின் பங்கு பெரிதாக பார்க்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கமான நாராயணசாமி திடீரென முதல்வராக அறிவிக்கப்பட சர்ச்சை எழுந்தது. பிறகு கடைசியாக நடந்த தேர்தலில் நமச்சிவாயம் பாஜகவில் சேர்ந்து வெற்றிக்கு உழைத்தார். இந்த நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் தலைமையை வலுப்படுத்த வைத்திலிங்கத்தை நியமித்துள்ளது காங்கிரஸ் தலைமை.
இதையும் படிங்க..பொறுத்தது போதும்.. 2024 தேர்தல் பாஜகவுக்கு பாடமாக இருக்க வேண்டும் - திமுகவினருக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்