ரூ.50 கோடி மதிப்பில் கோவில் நிலம் கையாடல்; பதுங்கியிருந்த மீன்வளத்துறை இயக்குநர் அதிரடி கைது

By Velmurugan s  |  First Published Aug 30, 2023, 12:15 PM IST

நில மோசடி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமின் மறுத்த நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குநரை சிறப்பு அதிரடி காவல் துறையினர் கைது செய்தனர்.


புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக மாவட்ட பதிவாளர் ரமேஷ் மற்றும் முன்னாள் தாசில்தாரும், தற்போதைய மீன்வளத்துறை இயக்குனருமான பாலாஜி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் ரமேஷ் மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகிய இரண்டு பேரும் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

Latest Videos

தனியார் மருத்துவமனையில் செவிலியர் மர்ம மரணம்; உடலை கைப்பற்றி காவல்துறை விசாரணை

வழக்கில் முக்கிய குற்றவாளியான மீன்வளத்துறை இயக்கனர் பாலாஜிக்கு முன்ஜாமின் வழங்க  அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பாலாஜிக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனை அடுத்து அவர் சென்னையில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது. ஏற்கனவே தாசில்தார் பாலாஜியை கைது செய்ய சென்னையில் முகாமிட்டு இருந்த சிறப்பு அதிரடிப்படை காவல் துறையினர் சென்னையில் பதுங்கி இருந்த தாசில்தார் பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலையில் நடந்து சென்ற சிறுமியை சுத்துபோட்ட தெரு நாய்கள்; பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

காமாட்சி அம்மன் கோவில் இடத்தை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வாங்கியதாக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு சமூக அமைப்பினர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!