புதுச்சேரி மாநிலத் தலைவர் சாமிநாதனிடம் ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார்.
புதுச்சேரி மாநிலத் தலைவராக பொறுப்பு வகிப்பவர் சாமிநாதன். இவரது மொபைல்போன் வாட்ஸ் ஆப்பில் கடந்த ஜூன் 11ம் தேதி அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனை சாமிநாதன் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. சில நாட்கள் கழித்து தொடர்ந்து அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து வாட்ஸ்ஆப் தகவல்கள் வந்து கொண்டே இருந்துள்ளது.
திடீரெனவாட்ஸ்ஆப் வீடியோ கால் மூலம் தோன்றிய பெண் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த சாமிநாதன் வீடியோ கால் இணைப்பை துண்டித்துள்ளார். இணைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்த சில நிமிடத்தில் சாமிநாதன் வீடியோ காலில் பேசிய போது எடுத்த ஸ்கிரின் ஷாட் போட்டோவை, சாமிநாதன் வாட்ஸ்ஆப் நம்பருக்கு அனுப்பி 50 ஆயிரம் பணம் தர வேண்டும். தரவில்லை என்றால் ஆபாசமாக உள்ள வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி உள்ளனர்.
பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை; கர்ப்பத்தால் பிடிபட்ட முதியவர்
இதனையடுத்து சாமிநாதன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சாமிநாதனை மிரட்டிய வாட்ஸ்ஆப் போன்கால் அழைப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்தப்படும் மொபைல்போன் சிம்கார்டுகள் ஒருவர் பெயரிலும், பயன்படுத்துபவர் வேறு ஒரு நபராக இருப்பர். அதனால் ராஜஸ்தானில் இருந்து தான் அழைத்தனரா அல்லது வேறு எந்த பகுதியில் இருந்து மோசடி கும்பல் செயல்படுகிறது என சைபர் கிரைம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.