புதுச்சேரியில் சாலை ஓரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியாங்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட தேங்காய் திட்டு பகுதியில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக துறைமுகம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய்கள் அதிக அளவில் இறக்கி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த குடிநீர் குழாய் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அவ்வழியே சென்ற முதலியார் பேட்டை காவலர் ஒருவர் பொதுமக்கள் துணையுடன் குடிநீர் குழாய் அருகே இருந்த மணலை அள்ளித் தூவி தீயை கட்டுப்படுத்தினார். இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
undefined
தமிழகத்தில் 2 கோடி பேருக்கு சர்க்கரை நோய்; உடற்பயிற்சி ஒன்றே தீர்வு - ராதாகிருஷ்ணன் தகவல்
தீ எரிந்ததைப் பார்த்த காவலர் சுதாரித்துக் கொண்டு தீயை உடனடியாக கட்டுப்படுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் குடிநீர் குழாய் திடீரென எவ்வாறு தீப்பற்றி எரிந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.