புதுவையில் ஐ போன் என்று கூறி போலி செல்போன்களை விற்பனை செய்த வெளி மாநிலங்களைச் சேர்ந்த 6 பேரை புதுச்சேரி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள மேட்ரிக்ஸ் மொபைல் கடையில் கடந்த 19ம் தேதி வாலிபர் ஒருவர் தன்னிடம் விலை உயர்ந்த ஐ போன் ஒன்று உள்ளது. இதன் மதிப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய். ஆனால் பில் இல்லாமல் தருவதால் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் போதும் என்று டூப்ளிகேட் ஐபோனை விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த செல்போன் கடை உரிமையாளர் பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில் இதுபோன்று பல்வேறு செல்போன் கடைகளில் செல்போன்களை விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
வளர்ற பையன் அவனுக்கு நிறைய சாப்பாடு போடுங்க; மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட பிடிஆர்
இதனை அடுத்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா. சைதன்யா உத்தரவின் பேரில் எஸ். பி. சுவாதி சிங் மேற்பார்வையில் பெரிய கடை ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேடிய தனிப்படைகள் கேரள பாலக்காட்டைச் சேர்ந்த முகமது, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முசைய்த், சவுத், காஷிப், உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்து அழைத்து வந்தனர்.
மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினர் அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலியான ப்ரோ மேக்ஸ் ஆப்பிள் ஐபோன் 10, போலியான ஆப்பிள் ஏர் பாட்ஸ் 35, போலியான போட் ப்ளூடூத் செட் 15, போலியான hp usb 128 மற்றும் ஜிபி 6 என பறிமுதல் செய்தனர். இது குறித்து எஸ். பி. சுவாதி சிங் மற்றும் ஆய்வாளர் நாகராஜ் கூறும் போது, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் துணி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வது போன்று போலியான போன்களை விற்பனை செய்துள்ளனர்.
இரகசிய உறவில் இருந்த ஓபிஎஸ், தினகரன் இருவரும் தற்போது வெளி உறவில் உள்ளனர் - கடம்பூர் ராஜூ விமர்சனம்
இந்த வழக்கில் தற்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தொடர்புள்ளதாக தெரிய வருகிறது. அவர்களையும் கைது செய்தால் தான் இந்த ஐபோன்கள் வெளி மாநிலத்திலிருந்து வாங்கப்பட்டதா? அல்லது இவர்களே இதை உற்பத்தி செய்கிறார்களா என்பது தெரியவரும் என்று தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.