புதுவையில் ரூ.25 லட்சம் போலி மதுபானம் பறிமுதல்; காவல் துறை அதிரடி

By Velmurugan s  |  First Published Jan 20, 2023, 4:53 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் வைக்கோல் கட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி மதுபானங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


புதுச்சேரியில் போலி மதுபானங்கள் தயாரித்து தமிழக பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் தனிப்படை  அமைக்கப்பட்டு புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் அரியூர் அருகில் உள்ள பங்கூர் சாராயக்கடை எதிரில் ஒரு பண்ணை வீட்டில் மதுபானங்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. 

நண்பனுக்காக மிரட்டல் விடுத்த நபரை படுகொலை செய்த ரௌடிகள்; 9 பேர் கைது

Latest Videos

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலால் துறை அதிகாரிகள் அந்த இடத்தினை சோதனை செய்தனர். சோதனையில் ஒரு டாடா ஏஸ் வாகனத்தில் 280 அட்டைப் பெட்டிகளில் 22 வகையான மதுபானங்கள் வைக்கோல் கட்டுகளுக்கு மத்தியில் இருப்பதை கண்டுபிடித்தனர். பிறகு அந்த வீட்டை சுற்றி வளைத்து சோதனை செய்ததில் போலி மதுபானம் தயாரிக்க தேவையான 30 எரிசாராயம், வண்ண திரவம், கேமரா DVR பெட்டி, காலி பாட்டில்கள், மூடிகள், அட்டைகள்,  CD பிளேயர், ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். 

கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிரபு, லூர்துநாதன், மோதிலால் என்ற ரகுராம் மற்றும் லக்ஷ்மிநாராயணன் என்ற குபேர் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போலி மதுபானங்களின் மதிப்பு சுமார் 25 லட்ச ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் பயன்படுத்திய டாடா ஏஸ் சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

click me!