கடலூர் மாவட்டத்தில் நண்பனை தாக்கியவர்களுக்கு மிரட்டல் விடுத்த நபரை 9 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் 9 பேரை கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அருகே உள்ள கீழ் குமாரமங்கலம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ் என்கிற தமிழரசன். இவர் நேற்று முன்தினம் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு புதுவை மாநிலம் பாகூர் அருகே அரங்கனூர் சுடுகாட்டு பகுதியில் வீசப்பட்டு கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாகூர் காவல் துறையினர், தமிழரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரூ.202 கோடியில் கல்லூரி வகுப்பறை, ஆய்வக கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர்
undefined
இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது கூட்டாளிகளே தமிழரசன் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த ரவுடி தாடி அய்யனார், அர்ச்சுனன் என்கிற ஆனந்த், ஏழுமலை, கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி பார்த்தசாரதி, சந்தோஷ், கார்த்திகேயன், கீழ் குமாரமங்கலம் விஜயகுமார், வேல்முருகன், தவமணி ஆகிய 9 பேர் தமிழரசனை கொலை செய்தது தெரியவந்தது.
இவர்கள் 9 பேரையும் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட தமிழரசன், அவரது நண்பர் குணா இருவரும் தாடி அய்யனார் கும்பலுடன் இருந்துள்ளனர். அப்போது, தாடி அய்யனாரின் எதிரியான தேவா என்பவரிடம், தாடி அய்யனார் பற்றிய தகவல்களை குணா தெரிவித்து வந்துள்ளார்.
கள்ளக்காதலுக்கு இடையூறு; எலும்புக் கூடுகளாக கண்டெடுக்கப்பட்ட கணவன்: இருவர் கைது
இதனை அறிந்த தாடி அய்யனார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குணாவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவரை தமிழரசன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இதன்பின் தாடி அய்யனாருக்கு போன் செய்த தமிழரசன், 'நண்பன் குணாவுக்கு ஏதேனும் நேர்ந்தால் உன்னை சும்மா விடமாட்டேன்' என்று மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாடி அய்யனார், கூட்டாளிகள் துணையோடு அவரை தனியாக வரவழைத்து அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைதான 9 பேரிடமும் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.