புதுச்சேரி தேங்காய்த்திட்டு புதுநகர் வைகை வீதியை சேர்ந்தவர் திருக்குமரன். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் ராமகிருஷ்ண சாய் (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
புதுச்சேரியில் காதலி தற்கொலை செய்து கொண்ட வேதனையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு புதுநகர் வைகை வீதியை சேர்ந்தவர் திருக்குமரன். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மகன் ராமகிருஷ்ண சாய் (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னைவிட 3 வயது அதிகமான பெண்ணான அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து மகள் அஞ்சலியை கண்டித்தனர். மேலும், ராமகிருஷ்ணசாயையும் கண்டித்ததாக கூறப்படுகிறது.
பல முறை சந்தித்தும் ராமகிருஷ்ணசாய் சரிவர பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். அத்துடன் அஞ்சலியின் போன் செய்தாலும் எடுப்பதில்லை. இதனால் மனவேதனை அடைந்த அஞ்சலி கடந்த மாதம் 17-ம் தேதி விநாயகர் கோவில் வீதியில் உள்ள ராமகிருஷ்ணன் சாய் வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதலியின் நினைவாகவே இருந்து வந்ததால் ராமகிருஷ்ண சாய் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராமகிருஷ்ணசாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சில நாட்களில் காதலனும் உயிரை மாய்த்துக்கொண்ட கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.