புதுச்சேரியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தி வந்த போதை ஆசாமியை கைது செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி டி.ஜி.எஸ். நகர் சொக்கநாதன்பேட் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்துவதாக அடிக்கடி புகார் எழுந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும் காவல் துறையினர் அதை கண்டுகொள்ளாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சொக்கநாதன் பேட் பகுதியில் காணும் பொங்கலை முன்னிட்டு சில மர்ம நபர்கள் சாலையில் அமர்ந்து மது அருந்திவிட்டு குடிபோதையில் கட்டைகளுடன் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கி உள்ளனர்.
நடிகர் வடிவேலுவின் தாயார் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முக அழகிரி
இதுகுறித்து சொக்கநாதன் பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து காவல் துறையினர் இந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் காரை உடைத்த மர்ம நபர்களை வலவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான வாலிபர் ஒருவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த வாலிபர் குடிபோதையில் கார் கண்ணாடிகளை உடைக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் வெளியிட்டுள்ளனர் இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.