தனியார் பள்ளிகள் கட்டாய மாற்றுச் சான்றிதழ் கொடுத்து மாணவர்களை வெளியேற்றுதல் கூடாது என புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வி இயக்குனர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
ஒரு சில தனியார் பள்ளிகள் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் பெற்றோரை மாற்றுச் சான்றிதழ் பெற வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனைத்து தனியார் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி, தலைவர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு கட்டாய இடமாற்றச் சான்றிதழ் வழங்கக் கூடாது. நிலையானது மற்றும் தவிர்க்க முடியாததாக இருந்தால், சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரியிடம் முன் அனுமதி பெற்று இடமாறுதல் சான்றிதழை வழங்குவதற்கு அலுவலர்கள் பெறப்பட வேண்டும்.
undefined
பழங்குடியின மாணவி கற்பழித்து கொடூர கொலை; குற்றவாளியிடம் ரகசிய இடத்தில் விசாரணை
இது கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி இயக்குனர் பிரியதர்ஷினி அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். ஒரு சில தனியார் பள்ளிகள் படிப்பில் மந்தமாக உள்ள, மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களை கட்டாய மாற்றுச் சான்றிதழ் வழங்கி அவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.