கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் படுகொலை; மனைவி, கள்ளக்காதலன் கைது

By Velmurugan s  |  First Published Apr 24, 2023, 10:51 AM IST

புதுச்சேரி மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை வெட்டி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரி அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 39). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 29ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானசேகரன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து லூர்துமேரி அளித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான ஞானசேகரனை தேடி வந்தனர். 

இதற்கிடையே அவரது செல்போனை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கடைசியாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த வியாபாரி செல்வம் (40) என்பவரிடம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

Tap to resize

Latest Videos

இபிஎஸ்- அண்ணாமலை மோதல்..! தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்- தமிழிசை செளந்தரராஜன் அதிரடி

அப்போது ஞானசேகரனை கொன்று புதைத்து விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட ஞானசேகரன் மனைவி லூர்துமேரிக்கும், செல்வத்துக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தெரியவரவே ஞானசேகரன், 2 பேரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் ஞானசேகரனை பொருட்படுத்தாமல் இருவரும் அவர்களுக்கு இடையேயான பழக்கவழக்கத்தை தொடர்ந்துள்ளனர். மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஞானசேகரனை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டியுள்ளனர். 

திடீரென பேசுவதை நிறுத்திய கல்லூரி மாணவி.. இளைஞர் செய்த வெறிச்செயல்.. அதிர்ச்சி சம்பவம்..

சம்பவத்தன்று செல்வம், ஞானசேகரன் வீட்டுக்கு சென்று மதுகுடிக்க போகலாமா? எனகேட்டு அவரை மோட்டார் சைக்கிளில் இடையார்பாளையம் அடுத்த வேலி காட்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானசேகரனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து செல்வம், லூர்துமேரி, செல்வத்தின் கூட்டாலி என 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!