10ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்த சந்தோசத்தில் கடலில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

By Velmurugan s  |  First Published Apr 21, 2023, 4:49 PM IST

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகிழ்ச்சியில் நண்பர்களுடன் கடலில் குளித்த மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.


புதுச்சேரி உப்பளம் அவ்வை நகரைச் சேர்ந்தவர் மணிமாறன், பெயிண்டரான இவருக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவரது மூத்த மகன் ஜீவகன் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தான். இன்று 10 ஆம் வகுப்பு பொது தேர்வின் கடைசி பரிட்சை முடிந்ததால் ஜீவகன் தனது பள்ளி நண்பர்கள் 6 பேருடன் புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரை கடலில் குளித்துள்ளார். 

அப்போது தீடிரென எழுந்த ராட்சத அலையில் சிக்கிய ஜீவகன் நீரில் மூழ்கி உள்ளார். இதனை கண்ட அவரது நண்பர்கள் கூச்சலிட்டதை அடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த கடலோர காவல் படை காவல் துறைியனர் ஜீவகனை சடலமாக மீட்டனர்.

Tap to resize

Latest Videos

undefined

ஆருத்ரா மோசடி விவகாரம்; ஆர்.கே. சுரேஷின் கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம்

தொடர்ந்து இது தொடர்பாக முதலியார்பேட்டை காவல் நிலையத்திற்கு கடலோர காவல் படையினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், மேலும்  பள்ளி மாணவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வானில் நிகழும் அரிதான நிகழ்வான நிழல் இல்லா நாளை வியப்புடன் கண்டு ரசித்த மாணவர்கள்

click me!