வானில் நிகழும் அரிதான நிகழ்வான நிழல் இல்லா நாளை வியப்புடன் கண்டு ரசித்த மாணவர்கள்

By Velmurugan s  |  First Published Apr 21, 2023, 2:27 PM IST

வானில் நிகழும் அரிய நிகழ்வான நிழல் இல்லா நாளை புதுச்சேரியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.


வருடத்தில் எல்லா நாளும் சூரியன் கிழக்கே உதித்து நண்பகல் பொழுதில் தலைக்கு மேலே வந்து மாலையில் மேற்கே மறையும் என்பது பொது கருத்து. ஆனால் இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் ஆண்டில் இரண்டே இரண்டு நாட்கள் தான் சரியாக சூரியன் கிழக்கே உதிக்கும் மேற்கே மறையும். மற்ற நாட்களெல்லாம் ஒன்று தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் தான் உதிக்கும்.

அதேபோல் ஒவ்வொரு நாளும் சூரியன் சரியாக நமது தலைக்கு மேலே நண்பகலில் வருவது இல்லை. அதனால் தான் நண்பகலிலும் நாம் நமது நிழலை காண்கிறோம். ஆயினும் ஒரு ஆண்டில் சரியாக இரண்டு நாட்களில் மட்டுமே சூரியன் சரியாக நமது தலைக்கு மேலே வந்து நிழலே இல்லாத நிலையை ஏற்படுத்தும். பூமியின் கடக, மகர ரேகைகளுக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே இந்த நிகழ்வு நடக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வாலியில் இருந்த நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு

இந்த நிகழ்வு அச்சரேகையும் வான்கோலத்தில் சூரியன் சாய் ரேகையும் சமமாக இருக்கும் போது உருவாகும் நிழல் இல்லா தினம் புதுவை பகுதியில் வடக்கு நோக்கி நகர்வில் ஏப்ரல் 21ம் தேதியும். தெற்கு நோக்கிய நகர்வில் ஆகஸ்ட் 21ம் தேதியும் நிழல் இல்லாத தினம் ஏற்படுகிறது. இந்த சுவையான அறிவில் ரீதியான முக்கியத்துவம் வாய்ந்த நாளை நிழிலில்லா நாள் என்று கொண்டாடும் வகையில் அதிசயமான இந்த நிகழ்ச்சியை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காணும் வகையில் ஆண்டுதோறும் புதுச்சேரி அறிவியல் இயக்கம் சார்பில் ஏப்ரல் 21ம் தேதி ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம்.

வாலிபரை கடத்தி 6 மணி நேரம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி துன்புறுத்தல் - 6 பேர் கைது

அதன்படி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காண்பதற்காக புதுச்சேரி அறிவில் இயக்கம் சார்பில் கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் இந்த நிழல் இல்லா நாளை கண்டு துள்ளி குதித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

click me!