Breaking: ஏப்ரல் 14ம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை... அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும்!!

By Narendran S  |  First Published Apr 12, 2023, 6:27 PM IST

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, புதுச்சேரி ஜிப்மருக்கு வரும் ஏப்ரல் 14ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாள் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு, அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை கடந்த ஆண்டு முதல் சமத்துவ நாள் என்று அறிவித்தது.

இதையும் படிங்க: 10.5% உள் ஒதுக்கீடு நீட்டிப்பு.. வன்னியர்களுக்கு சமூக அநீதி - கொந்தளித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

Tap to resize

Latest Videos

undefined

அதன்படி, அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டு வருகிறது. இதனிடையே அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீலகிரியில் நகையை லாவகமாக திருடிவிட்டு பங்குபோடும்போது மாட்டிக்கொண்ட கொள்ளையர்கள்

இதுக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வரும் ஏப்ரல் 14ம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் அனைத்து பிரிவுகளும் மூடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கும் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

click me!