புதுவையில் 5 வருடமாக காதலிப்பதாகக் கூறி இளம் பெண்ணுடன் உள்ளாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த பாகூரை சேர்ந்தவர் வசந்தன். இவர் புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இதே மருத்துவமனையில் புதுச்சேரி ஆட்டு பட்டியைச் சேர்ந்த ஒரு பெண் செவிலியரும் பணிபுரிந்து உள்ளார். இவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து இரவு நேர வேலை வழங்கியுள்ளது.
ஒரே மருத்துவமனையில் இருவரும் பணிபுரிந்ததால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. தொடர்ந்து அவர்கள் 5 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். அப்பொழுது இருவருமே திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து பலமுறை தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
undefined
பில்லி சூனியம், புதையல் எடுப்பதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி; போலி சாமியார், மனைவி கைது
இந்த நிலையில் வசந்தன், காதலித்த பெண்ணை கரம் பிடிக்காமல் புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வை நகரை சேர்ந்த அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு செவிலியரை திருமணம் செய்ய பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை மறுநாள் திங்கள்கிழமை பாகூர் ஸ்ரீ விஜய வர்த்தினி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடல் புடலாக நடைபெற்ற வருகின்றன. இந்த நிலையில் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணை கரம் பிடிக்கும் வசந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வசந்தனின் காதலி வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் திருமணம் நடைபெற உள்ள நிலையில் புது மாப்பிள்ளை வசந்தனை வில்லியனூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
அசுர வேகத்தில் மோதி பெண்ணை அந்தரத்தில் பறக்கவிட்ட கார்; தூய்மை பணியாளர் பலி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வசந்தனின் உறவினர்கள் இன்று வில்லியனூர் காவல் நிலையம் எதிரே விழுப்புரம் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து பேசிய வசந்தனின் தாய், எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மகன் மீது பொய் வழக்கு போட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும், தன் மகன் எந்த ஒரு பெண்ணையும் காதலிக்கவில்லை. பழிவாங்க வேண்டும், திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு புகார் கொடுத்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பினர்.