தொழிலாளர்களின் சிரமத்தை குறைக்க அரசுப்பள்ளி மாணவியின் புதிய கண்டுபிடிப்பு; குவியும் பாராட்டுகள்

By Velmurugan s  |  First Published Feb 23, 2023, 10:53 AM IST

தொழிலாளர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக எளிதாக சுமை தூக்கும் கருவியை உருவாக்கிய புதுச்சேரி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.


புதுச்சேரி மாநிலம், கணுவாப்பேட் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகா. இவரது அறிவியல் ஆசிரியை வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் எளிதாக சுமை தூக்குவதற்கான கருவியை உருவாக்கியுள்ளார். மாணவியின் இந்த படைப்புக்கு புதுச்சேரியில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. 

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் தீபிகாவின் படைப்பு புதுச்சேரி மாநில அளவில் 3-வது பரிசை வென்றது. இதனையொட்டி பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சணாமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அரசுப்பள்ளி மாணவி தீபிகாவின் படைப்பு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. 

Latest Videos

undefined

குறிப்பாக, அதிக கனமான பொருட்களை தூக்கும் போது காயமடைகின்றனர். தசை, எலும்பு கோளாறு, கழுத்து வலி, தலை மற்றும் கண் அசைவு கோளாறு, முதுகெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. மிகப்பெரிய அல்லது அதிக எடையுள்ள சுமைகளை சுமப்பதால் ஏற்படும் காயங்கள் மற்றும் சுளுக்கு ஆகியவை தொழிலாளர்களுக்கு பொதுவான ஆபத்துகளாகும். எனவே, முதுகு மற்றும் தலையில் அதிக எடையை சுமந்து செல்லும் தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் விதமாக எளிதாக சுமை தூக்கும் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது உடல் முழுவதும் எடையை பிரித்து கொடுக்கிறது. முதுகெலும்பு பிரச்னைகள் மற்றும் எலும்பு சிதைவை தடுக்கிறது. முதுகு மற்றும் தலையில் சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களை இக்கருவி மூலம் காப்பாற்ற முடியும். மூங்கில் அதிகம் கிடைக்கும் இடங்களில் இதை மூங்கிலில் தயாரிக்கலாம். மற்ற இடங்களில் இதை உலோகம், பிளாஸ்டிக், பிவிசி பைப் போன்ற பொருட்களாலும் செய்யலாம்.  இது பின்புறம், தலை மற்றும் தள்ளுவண்டியில் சுமைகளை சுமக்கும் மூன்று முறைகளிலும் பயன்படுத்தலாம். 

தமிழர்கள் மீது பாஜக தான் உண்மையான அன்ப கொண்டுள்ளது; தமிழிசை விளக்கம்

இதில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ஸ்ருவை (screw) பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் தயாரிப்பை மாற்றலாம். கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். இது மடிக்கக்கூடியது மற்றும் பணியிடத்துக்கு எடுத்துச் செல்ல எளிதானது. குறைந்த உள்கட்டமைப்புடன் எளிதாக தயாரிக்கலாம் மாணவி தெரிவித்தார்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அடுத்த வாரம் நிவாரணத் தொகை - முதல்வர் அறிவிப்பு

click me!