புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் சிக்னலில் நின்ற போது திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கயதை அடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடனடியாக தீயை அனைத்து பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த கார் இந்திரா காந்தி சிலை சதுக்கம் அருகே வந்தபோது சிக்னல் போடப்பட்டதால் நின்றது. அப்போது திடீரென காரின் முன்பகுதியிலிருந்து புகை வெளியே வந்து திடீரென கார் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. உடனடியாக காரில் இருந்த நபர் சுதாரித்துக் கொண்டு விரைந்து இறங்கி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதனால் இந்திரா காந்தி சிலை சதுக்க சிக்னலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் துறையினர், வாகன ஓட்டிகள் உதவியுடன் காரில் எரிந்து கொண்டிருந்த காரை விரைந்து விரைந்து அணைத்தனர். ஆனால் அதற்குள் காரின் உள்பகுதி முழுவதும் எரிந்து சேதமானது. இதனால் பெரும் பரபரப்பு நிலவியது.
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பு பரிசு!!
இந்த தீ விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் காரணமாக இந்திரா காந்தி சதுக்கம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த ரெட்டியார்பாளையம் போலீசார் கார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.எப்.எஸ். நிர்வாக இயக்குநர் உள்பட 10 பேருக்கு பிடிவாரண்ட்