புதுச்சேரியில் தனது நடத்தையில் சந்தேகமடைந்து தொடர்ந்து பிரச்சினையில் ஈடுபட்ட மனைவியின் தொல்லை தாங்காமல் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் தன்வந்தரிநகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் நாகராஜ். இவருக்கு திருமணமாகி ஒரு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் காவலர் நாகராஜ் கோரிமேடு காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது படுக்கை அறையில் நாகராஜ் மனைவியின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்தவுடன், தன்வந்தரிநகர் காவல் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் கணவன் மீது சந்தேகப்பட்டு மனைவி அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்ததும், இதனால் கடந்த 15 நாட்களாக நாகராஜ் சரிவர பணிக்கு வராமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனமுடைந்த நாகராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது தன் மனைவியின் சேலையால் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமிக்கு தாலி கட்ட நினைத்த தாத்தா, குடும்பம் நடத்திய சித்தப்பா, ரூட்டு போட்ட தாய் கைது
பணியில் எப்போதும் நேர்மையாகவும் தூய்மையாகவும் பணியாற்றி வந்த நாகராஜின் திடீர் தற்கொலை சக காவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகராஜின் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினை தான் காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டப்பகலில் நிர்வாணமாக சாலையில் வாக்கிங் சென்ற போதை ஆசாமி