புதுச்சேரியில் தேசிய அளவில் 34வது இடத்தில் இருந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தற்போது 200வது இடத்திற்கு சரிந்துள்ள நிலையில் பதிவாளருக்கு எதிராக பேராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் செயல்பட்டு வந்த புதுச்சேரி அரசின் பொறியியல் கல்லூரி கடந்த 2020ம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மாற்றப்பட்டது. அப்பொழுதே ஆட்சி மன்ற குழு அமைக்கப்படாததால் பதிவாளராக நியமிக்கப்பட்ட சிவராஜ் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. மத்திய அரசு வழங்கிய ரூசோ நிதியை தவறாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பல்கலைக்கழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய அளவிற்கு திறமை இல்லாத பதிவாளராக இருக்கும் அவரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக வேந்தராக உள்ள துணைநிலை ஆளுநர் உள்ளிட்டவர்களிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
கலைஞரை மெரினாவில் புதைப்பதற்கு உதவியவர்கள் நாங்கள்; எங்களுக்கே தடையா? அன்புமணி ஆவேசம்
மேலும் பல்கலைக்கழக வளர்ச்சிப் பணிக்கு எந்த வேலையும் செய்யாமல் காலி பணியிடங்களை நிரப்பாமல் பல்கலைக்கழக நிதியை தவறாக கையாளும் பதிவாளரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேராசிரியர் சங்கத்தின் செயலாளர் கல்பனா, துணைத் தலைவர் இளம் சேரலாதன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பேராசிரியர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
ஜவுளி துறையில் இந்தியாவை உலக மையமாக மாற்ற பிரதமர் உறுதி ஏற்றுள்ளார் - மத்திய அமைச்சர் தகவல்
போராட்டம் குறித்து சங்கத்தின் செயலாளர் பேராசிரியர் கூறும்போது, தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முழு நேர பதிவாளர் இல்லை. தற்பொழுது உள்ள பதிவாளர் சிவராஜ் அரைமணி நேரம் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்ளார். இதனால் காலியாக உள்ள 140 பேராசிரியர் பணியிடங்கள், 300 ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால் தேசிய அளவில் 34 வது இடத்தில் இருந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 200க்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் 3000 மாணவர்கள் படிக்க கூடிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் ஆட்சி மன்ற குழு இல்லை. இதனை நியமிக்க வேண்டிய துணைநிலை ஆளுநரும், அரசும் வேடிக்கை பார்ப்பதாக துணை தலைவர் இளம்சேரலாதன் குற்றம்சாட்டினார்.