பட்டா இல்லாமல் 30 ஆண்டுகளாக தவிக்கிறோம்; சட்டசபை வளாகத்தில் நரிக்குறவர் மக்கள் போராட்டம்

By Velmurugan s  |  First Published Aug 30, 2023, 5:40 PM IST

புதுவையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முதல்வரை சந்திக்க சட்டசபைக்குள் நுழைய முயன்ற நரிக்குறவர் இன மக்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் தனியார் சோப்பு நிறுவனத்தின் பின்புறம் உள்ள திடலில் ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. தேர்தலின்போதும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மனைப்பட்டா வழங்கவில்லை. இந்த நிலையில்  நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளோடும், கைகளில் வெற்று கேண்களுடனும் சட்டசபை வளாகத்தின் முன்பு திரண்டனர். இதைக்கண்ட சட்டசபை காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் நரிக்குறவர்கள் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுக்கும் மேல் வசித்து வரும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மனைப்பட்டா வழங்கவில்லை. வெயிலிலும், மழையிலும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

Tap to resize

Latest Videos

undefined

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

முதலமைச்சரை சந்திக்க எங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், முதலமைச்சர் சட்டசபையில் இல்லை. அவர் வந்தவுடன் அனுமதி பெற்று உள்ளே அனுமதிப்பதாக காவலர்கள் தெரிவித்தனர். நரிக்குறவர்கள் முதலமைச்சர் வரும் வரை நிற்பதாகக்கூறி பாரதிபூங்கா நுழைவுவாயிலில் காத்திருந்தனர். காவல் துறையினர் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

இலவச பட்டா வழங்கக்கோரி கழுதையிடம் மனு கொடுத்த 46 பேர் கைது; கோவில்பட்டியில் பரபரப்பு

அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது. காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி பூங்காவிற்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதலமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். ஆனால் முதலமைச்சர் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

click me!