புதுவையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.500 குறைகிறது - முதல்வர் பெருமிதம்

By Velmurugan s  |  First Published Aug 30, 2023, 7:22 PM IST

வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலையை மத்திய அரசு ரூ.200 குறைத்துள்ள நிலையில், புதுவையில் மாநில அரசின் சலுகையையும் சேர்த்து சமையல் எரிவாயு ஒன்றுக்கு ரூ.500 மானியம் கிடைக்க உள்ளது.


சமையல் எரிவாயுவின் விலை ரூ.200/- குறைக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசு, மக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழைக்குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் அதற்கு ஒரு உதாரணம் ஆகும். 

உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏற்கனவே 9.1 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழைப்பெண்களுக்கு கூடுதலாக 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு மத்திய அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளிகள் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Latest Videos

undefined

ஆசைக்கு இணங்க மறுத்ததால் பதவி பறிப்பு; திமுக எம்எல்ஏ மீது பெண் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு

அவர்களுக்கு இன்று முதல் மேலும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தன் தினத்தில் மகளிருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசாக இந்த விலைக் குறைப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மாநில அரசின் சார்பில் ஏற்கனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300/-ம். மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150/-ம் சமையல் எரிவாயு மானியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

மனை பட்டா இலவச வீடு அடிப்படை வசதி இல்லாமல் 30 ஆண்டுகளாக தவிக்கிறோம்

இந்த நிலையில், மத்திய அரசு ரூ.200/- மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவாக உள்ளது. மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாக  பிரதமர்அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ரங்கசாமி தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

click me!