சாமானிய குழந்தையும் மருத்துவராகலாம், அமைச்சரின் மகனாகவே இருந்தாலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலைக்கு காரணம் நீட் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரியில் காமராஜர் மணி மண்டபத்தில் நடைபெற்ற என் மண் என் தேசம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துனை நிலை ஆளுநர் தமிழிசை, தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தார். ஆளுநர் ஒரு கருத்தை கூறினால் அதை ஆளுங்கட்சி நிர்வாகிகள் எந்த அளவிற்கு மோசமாக எதிர்கொள்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
4 மாதத்தில் பெயர்ந்து விழுந்த பள்ளி மேற்கூரை; அரசுப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு
undefined
இதை போன்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் ஆதரவு கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அங்கே பேச்சுகள் நடைபெறுவது வருத்தத்திற்குரியது. ஒரு கருத்தை வார்த்தையால் எதிர்கொள்ளலாம். வன்முறையால் எதிர்கொள்ளமுடியாது. கலவரத்தால் எதிர்கொள்ளக் கூடாது. எந்த மாநிலத்திலும் இது இருக்க கூடாது. தமிழகத்திலும் இருக்கக் கூடாது என்பது எனது கருத்து.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆளுநரின் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லும் போது வன்மையான வார்த்தைகளை பயன்படுத்துவது தவறு. நீட்டு தேவையில்லை, வேண்டாம் என்று பலரும் கருத்து கூறலாம். ஆனால் இந்த டாக்டருக்கு நீட்டு தேவை. சாமானியர் கூட இன்று மருத்துவராக முடிகிறது. அமைச்சரின் குழந்தை மருத்துவராக முடியவில்லை. இதற்கு காரணம் நீட் என்றும் தமிழிசை தெரிவித்தார்.