புதுச்சேரியில் முடி திருத்தம் செய்ய பணம் இல்லாமல் பள்ளிக்கு அலங்கோலமாக வந்த 24 அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வகுப்பறையிலயே முடிதிருத்தம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநிலம் சூரமங்கல கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. கடந்த 2007ம் ஆண்டு புதுச்சேரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தவர், தற்போது கல்மண்டபம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வருகிறார். சமூக சேவையின் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் ஏழை மாணவர்களின் கல்விக்கு தன்னால் இயன்ற உதவிகளை அவ்வப்போது செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
குறிப்பாக மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம், பேனா, நிதி உதவி அதே போல் 10ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு விருது வழங்குவது, 10ம் வகுப்பு முடித்து செல்லும் மாணவர்களுக்கு அறுசுவை விருந்துடன் வழியனுப்புவது, உள்ளிட்டவற்றை சொந்த நிதியில் செய்து வருகிறார்.
திருமணமாகாத விரக்தியில் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை
இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் 24 பேர் முடிவெட்டாமல் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனை பார்த்த அவர் அவர்களை அழைத்து முடிவெட்டிக்கொண்டு பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதே போன்று வந்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இது குறித்து மாணவர்களை அழைத்து விசாரித்தபோது, முடிவெட்டக்கூட பணம் இல்லை எனவும் சிலர் தங்களின் பெற்றோர் வெளியூருக்கு கூலி தொழிலுக்கு சென்றுள்ளதாகவும் கூறியுள்ளனர். உடனே முடிதிருத்தும் நபரை பள்ளிக்கே அழைத்து வந்த ஆசிரியர் கிருஷ்ணசாமி, பள்ளி வகுப்பறையிலேயே வைத்து ஒரு மாணவருக்கு ரூ. 80 செலவு செய்து முடி திருத்தம் செய்து விட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.