அந்த விசயத்துல அண்ணன் கொஞ்சம் வீக்; கடைக்காரரின் பலவீனத்தை பயன்படுத்தி 1.25 லட்சம் சுருட்டல்

By Velmurugan s  |  First Published Oct 25, 2023, 6:13 PM IST

புதுச்சேரி வில்லியனூர் அருகே மளிகை கடைக்காரரின் பலவீனத்தை பயன்படுத்தி உல்லாசத்துக்கு அழைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்ற இளம் பெண் உள்பட 4 பேர் மீது வழக்கு.


புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 50). இவர் அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் கருணாகரன் கடைக்கு வந்த சுமார் 21 வயது மதிக்கத்தக்க கல்லூரி இளம்பெண், தனது பெயர் வனிதா என்று அறிமுகம் செய்துகொண்டு அனாதையான தான், உறவினர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருவதாகவும், தற்போது சூழ்நிலை சரியில்லாததால்,  அருகில் தங்கி படிக்க உதவி செய்ய வேண்டும் என கூறினார். 

இதனை நம்பிய கருணாகரன் தனது செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அதன்பிறகு செல்போனில் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து, சகஜமாக பேசி உள்ளனர். அப்போது, இளம்பெண், திடீரென்று நாம் வெளியே சென்று ஆனந்தமாக  இருக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். அந்த கல்லூரி மாணவி கருணாகரனை நேற்று முன்தினம்  இரவு 7.30 மணியளவில் போன் செய்து, வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை சுடுகாட்டு சாலையில் உள்ள பம்புசெட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கருணாகரனும் அங்கு சென்றுள்ளார். இருவரும் உல்லாசமாக இருக்க முயற்சி செய்தபோது, முட்புதரில் பதுங்கியிருந்த 3 பேர் செல்போனில் படம் பிடித்தபடி டார்ச் லைட் அடித்துக்கொண்டு கருணாகரனை நோக்கி வந்து கருணாகரனை மிரட்டி  உள்ளனர். இவரும் பயந்து தன்னிடம் இருந்த 75 ஆயிரம் மற்றும் நண்பரிடம் இருந்து 50 ஆயிரம் என பெற்று கொடுத்துள்ளார். அந்த கும்பலில் ஒருவர் அடையாளம் தெரிந்ததன் அடிப்படையில் கருணாகரன் இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

திருச்சி அருகே இளம் பெண்களை சாட்டையால் அடிக்கும் வினோத திருவிழா; திரளானோர் பங்கேற்பு

புகாரை தொடர்ந்து  இளம்பெண்ணை வைத்து வலைவீசி மோசடியில் ஈடுபட்ட ராமு, பிரகாஷ் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். வனிதா, அருண்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். புதுச்சேரியில் பழகிய சில நாட்களிலேயே ஆனந்தமாக இருக்கலாம் என கூறிய கல்லூரி மாணவியை நம்பி பணத்தை இழந்த மளிகை கடைக்காரரின் சபல புத்தியால் லட்சத்தை இழந்துள்ளார். கல்லூரி மாணவி தற்போது தலைமறைவாக உள்ளதால் கைது செய்தபிறகு வேறு யார் யார் இதுபோன்று சிக்கினார்கள் என்பது வெளிச்சத்திற்கு வரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

click me!