சந்திர பிரயங்கா அமைச்சரவையில் நீக்கப்பட்ட பின்னரே பதவியை ராஜினாமா செய்ததாக அம்மாநில சபாநாயகர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தன்னை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். பின் வாசல் வழியாக முதலமைச்சரானவர் என என்னை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.
நாராயணசாமி தற்போது காங்கிரஸில் என்ன பொறுப்பில் இருக்கிறார்? முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சராக யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம், யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற அதிகாரம் படைத்தவர். சந்திர பிரியங்கா ராஜினாமா கடிதத்தை முதல்வரிடம் கொடுத்து ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.
தொடர் விடுமுறை; பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 அம்னி பேருந்துகள் பறிமுதல் - அதிகாரிகள் அதிரடி
ஆனால் அவர் விதிமுறைகளை மீறி நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பி விட்டார். அதற்கு முன்பே அமைச்சரை நீக்கி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பிவிட்டார். இந்த இரு கடிதமும் மத்திய அரசுக்கு சென்றதால் குழப்பம் ஏற்பட்டது. இது சம்பந்தமாக மத்திய அரசுக்கு ஆளுநர் அளித்த விளக்கத்தைத் தொடர்ந்து சந்திர பிரியங்காவை நீக்கி மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் புதுச்சேரிக்கு மத்திய அரசு தேவையான நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும், தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்து மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவார் என்றும் அவர் தெரிவித்தார்.