போலீஸ் மேலயே புகார் குடுப்பியா? இளைஞரை தாக்கி அவர் மீதே வழக்கு பதிவு செய்த போலீஸ்

By Velmurugan s  |  First Published Oct 18, 2023, 4:00 PM IST

புதுச்சேரியில் போலீசார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞரை காவல் துறையினரே தாக்கி அவர் மீதே வழக்கு பதிந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுச்சேரி நோனாங்குப்பம் புதிய காலனி தாமரைக்குளம் வீதியைச் சேர்ந்த ஐய்யனாரப்பன் மகன் ஷர்ணிஷன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரை வழிமறித்த அரியாங்குப்பம் காவலர்கள் நீ எந்த ஊர் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் நோனங்குப்பம் காலனியை சேர்ந்தவர் என தெரிவித்ததால் காவலர்கள் நோனாங்குப்பம் காலனி என்றால் என்ன பெரிய ஆளா? உன்னை தொலைத்துவிடுவோம் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

ஏன் சம்பந்தம் இல்லாமல் இப்படி பேசுகிறீர்கள் என வாலிபர் கேட்டதற்கு பொதுவெளி என்றும் பாராமல் அவரை தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் காவலர்கள் மீது புகார் செய்ய தானே தனியாக காவல் நிலையம் சென்றுள்ளார். 

இதயமுள்ள அனைவரும் கலங்குகின்றனர் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

அவரை விசாரணை செய்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரியாக பணியில் இருந்த துணை உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி புகார் கொடுக்க வந்த இளைஞனின் சாதி பெயரை சொல்லி காவல் நிலையத்திற்கு வந்து எங்கள் காவலர்கள் மீதே புகார் கொடுப்பாயா மரியாதையாக ஓடி விடு என மீண்டும் மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் காவல் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனை கேமரா மூலம் பார்த்துக் கொண்டிருந்த காவல் வட்ட ஆய்வாளர் கலைச்செல்வன் அந்த தாழ்த்தப்பட்ட வாலிபரின் ஜாதியை சொல்லி இவ்வளவு தைரியம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அந்த வாலிபரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு விரைந்து வந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், இளைஞரின் உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!