சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் நரேந்திர மோடி அரசு ஆட்டம் கண்டு உள்ளதாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, உள்ளிட்ட அதிகாரிகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்கு போடுவதையே வேலையாக கொண்டுள்ளார்கள். தமிழ்நாடு, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தை குறிவைத்து பொய் வழக்குகள் போட்டு தலைவர்களின் பெயருக்கு கலங்கம் விளைவித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் ஊழல், மத்திய பிரதேசத்தில் ஊழல், மோடி அரசாங்கத்தில் ஊழல், புதுச்சேரி அரசில் ஊழல் இவர்களின் ஊழல்களை சுட்டி காட்டினாலும் அமலாக்கத் துறையோ அல்லது சிபிஐயோ வழக்கு பதிவு செய்வதில்லை. அமலாக்கத்துறை, எதிர்க்கட்சிகள் மீது 5600க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து இதுவரை ஆறு வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அகில இந்திய அளவில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இதை நரேந்திர மோடி அரசு எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடை கேட்டபோது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் மோடியின் அரசு ஆட்டம் கண்டுள்ளது.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; வெளிநாட்டில் குவிக்கப்பட்ட ரூ.500 கோடி
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுவதாக கூறிக்கொள்ளும் ரங்கசாமி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2024ல் பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதால் தலைவர்களின் படத்தினை சேதப்படுத்துவது, சேற்றை வாரி பூசுவது போன்ற வேலைகளில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆட்சியில் போலி பத்திரங்களை தயாரிப்பது. தனியார் சொத்துக்களை வேறு ஒருவருக்கு விற்பது. கோவில் நிலங்களை அபகரிப்பது போன்று தொடர்ந்து பத்திரபதிவு துறை ஊழிலில் ஈடுபட்டு வருகிறது.
புதுவையில் பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்; மனைவிக்கு சாபம் விட்டதால் கொலையாளி வெறிச்செயல்
ஏற்கனவே சிபிஐ காரைக்கால் சார்பதிவாளரை கைது செய்துள்ளது. அவர் தனது வாக்குமூலத்தில் லஞ்ச பணம் யார் யாருக்கு சென்றுள்ளது என கூறியுள்ளார். இதே போல் காமாட்சியம்மன் கோவில் நில விவகாரத்தில் சார் பதிவாளர் உள்பட 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நிலம் கோவிலிடம் ஒப்படைக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.