அரசுக்கு வருமானம் தான் முக்கியம் என்றால் 4 அல்லது 5 இடங்களை தேர்வு செய்து அங்கு விபசாரத்திற்கு அரசு அனுமதி அளித்தால் வருமானம் அதிகரிக்கும் எள்று அதிமுக மாநலச் செயலாளர் அன்பழகன் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கலாசாரம் சீரழிந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரியில் கலாசார சீரழிவை தடுக்க போலீசார் இல்லை. 300க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்பா நடக்கிறது, விபசாரம் நடக்கிறது. இதை கேட்பதற்கு போலீஸ் இல்லை. சுற்றுலா வரும் பெண்கள் குடித்துவிட்டு அரைகுறை ஆடையுடன் நகரப் பகுதி முழுவதும் ஆக்கிரமித்து உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் புதுச்சேரியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சொந்தமில்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. அரசாங்கத்திற்கு வருமானம் முக்கியம் என்றால் நான்கு, ஐந்து இடங்களில் ரெட் லைட் ஏரியா என்று அறிவித்து இங்கு விபசாரம் நடத்த அனுமதி வழங்கினால் அரசுக்கு நல்ல வருமானம் வரும். பள்ளி மாணவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ஆரவாரமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற அறநிலையத்துறை அமைச்சரின் 60ம் கல்யாணம்
விதவிதமான வகைகளிலும் சாக்லேட், மிட்டாய், பேப்பர் போன்ற விதவிதமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆண்கள் மட்டுமல்ல, பெண்களையும் குறி வைத்து இந்த வியாபாரம் நடைபெறுகிறது. இதையெல்லாம் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் கரனாக மாறிவிட்டான் என்று குற்றம் சாட்டினார்.