புதுச்சேரியில் அரசு ஊழியர் ஓய்வு பெற்ற நிலையில் பணிக்கொடை வழங்காமலை இழுத்தடிக்கப்பட்டதால் மனமுடைந்த ஊழியர் சோபிதகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி நேரு நகரைச் சேர்ந்தவர் சோபிதகுமார் (வயது 62). அரும்பார்த்தபுரம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி வந்த இவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றார். ஆனால் மூன்று வருடங்கள் ஆகியும் இதுவரை அவருக்கு பணிக்கொடை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் கடந்த மூன்று வருடமாக பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி அரசு நிறுவனமான காண்பெட் வளாகத்தில் தன்னை தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவையில் தனியார் பள்ளியால் திடீரென அமைக்கப்பட்ட வேகத்தடை; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த நிலையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழப்பிற்கு காரணமான கான்பெட் மேலாண் இயக்குநர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தினார்கள். இந்த நிலையில் கோரிமேடு காவல் நிலையம் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா கான்பெட் மேலான் இயக்குநரை வரவழைத்து ஊழியர் இறந்ததற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அரசு ஊழியர் ஓய்வு பெற்ற உடனேயே அவரது பணிக்கொடையை கொடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அதிகாரிகளின் மெத்தனப்போக்கே அவர் உயிரிழப்புக்கு காரணம் என்று அரசு அதிகாரியிடம் கடுமையாக பேசினார். இதனால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் சிவா, புதுச்சேரியில் அரசு துறையில் பணியாற்றி வரும் பல பேர் பணிக்கொடை கிடைக்காமல் உயிரிழந்துள்ளார்கள். அது குறித்த பட்டியலை கேட்டு இருக்கிறோம். அனைத்து விவகாரத்திலும் தலையிடும் ஆளுநர் தமிழிசை ஓய்வு பெற்ற அதிகாரி சாவுக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவரது குடும்பத்திற்கு இழப்பு தர வேண்டும் என்று கூறிய சிவா, ஓய்வு பெற்ற அதிகாரி இறந்தது சம்பந்தமாக இதுவரை ஒரு தாசில்தார் கூட சென்று பார்க்கவில்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.