புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் புதிய திருப்பமாக, மனைவிக்கு எதிராக சாபம் விட்டதால் ஒப்பந்த பணிப்பெண்ணை கொலை செய்ததாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி, வில்லியனூர் அடுத்த அரியூர்பேட்டை மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கோவித்தம்மாள் (வயது 40). ஜிப்மர் ஒப்பந்த ஊழியரான இவர் கடந்த 3ம்தேதி அரியூரில் நடந்து சென்றபோது மர்மநபர்களால் இரும்பு ராடால் தலையில் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேற்கு எஸ்பி வமசிதரெட்டி தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அப்பகுதி வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் மோப்ப நாய் ரோஜர் வரவழைக்கப்பட்டு சிறப்பு அதிரடிப் படையினர் விசாரணை நடத்தினர். அப்போது ரோஜர் கொலைக்கு பயன்படுத்திய இரும்பு கம்பியை கண்டுபிடித்து வழக்கிற்கு பெரிதும் உதவியது. அதன் அடிப்படையில் அந்த இரும்பு கம்பி எங்கு தயார் செய்யப்பட்டது என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கம்பி திருபுவனையில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.
அரசுக்கு வருமானம் தான் முக்கியம் என்றால் விபசாரம் நடத்தலாம்; கலாசார சீரழிவால் அன்பழகன் ஆவேசம்
இதையடுத்து அந்த கம்பெனியில் யார் வேலை செய்கிறார் என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதன்பேரில் அரியூர்பேட் மாரியம்மன் கோயில் வீதி கோவிந்தம்மாள் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பஞ்சமூர்த்தி (33) என்பவர் வேலை செய்வது தெரியவந்தது. பிறகு அவரை பிடித்து விசாரித்தபோது கோவிந்தம்மாளை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து பஞ்சமூர்த்தியை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தியதில் புதுமாப்பிள்ளையான இவருக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆன நிலையில் இவரது. மனைவி காப்பிணியாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிந்தமாள் மீன் கழுவிய தண்ணீரை பஞ்சமூர்த்தி வீட்டு வாசளில் ஊற்றியுள்ளார். இதனால் இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோவிந்தம்மாள், பஞ்சமூர்த்தியின் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி குழந்தை கருவிலேயே கலைத்துவிடும் என சாபம் விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது பஞ்சமூர்த்தி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
ஆரவாரமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற அறநிலையத்துறை அமைச்சரின் 60ம் கல்யாணம்
இந்த நிலையில் பஞ்சமூர்த்தி கோவிந்தம்மாளை அடிக்க திட்டமிட்டு அவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து இரும்பு கம்பியை எடுத்து வந்து கோவிந்தம்மாள் வீட்டுக்கு செல்லும் வழியில் மறைத்து வைத்துள்ளார். பிறகு சம்பவத்தன்று கோவிந்தம்மாள் வேலை முடித்து வீட்டுக்கு வரும் போது மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியை எடுத்து கோவிந்தம்மாள் தோல்பட்டையில் அடித்துள்ளார். பிறகு அவர் கூச்சலிட்டந்தால் மீண்டும் தலையில் அடித்துள்ளார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுத்தவுடன் சரமரியாக அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி இரும்பு கம்பியை ஒரு மரத்தின் அருகில் மறைத்து வைத்துவிட்டு வழக்கம் போல் இரவுபணிக்கு சென்றுவிட்டார்.
பிறகு மறுநாள் காலையில் எப்போதும் போல் வீட்டுக்கு வந்து கொலைக்கும், இவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதது போன்று நாடகமாடியுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து வாக்குமூலத்தை பெற்ற போலீசார் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு மந்திய சிறையில் அடைத்தனர்.