மாநில அந்தஸ்து பெற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்போம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சரவை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி, புதுச்சேருக்கு மாநில அந்தஸ்து பெற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்போம். மீண்டும் தீர்மானத்தை வலியுறுத்துவோம்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு திடீர் உடல் நிலை பாதிப்பு..! ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதி
புதுச்சேரியின் 4 பிராந்தியங்களையும் ஒருங்கிணைத்து தான் மாநில அந்துஸ்து தேவை. மீண்டும் தீர்மானத்தை வலியுறுத்துவோம். கேட்பது நமது உரிமை. கொடுப்பார்கள் என நம்பிக்கையுள்ளது. மாநில அந்தஸ்து பெறுவது என்பது எனக்கானது அல்ல. புதுச்சேரி வளர்ச்சிக்கானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்ட்ட அரசுக்கு அதிகாரம் வேண்டும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மாநில அந்தஸ்து கிடைத்தால் கூடுதல் அதிகாரம் கிடைக்கும். தனிச்சையாக முடிவுகளை அரசு எடுக்க முடியும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்போம் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.