புதுச்சேரி.. நைட்டு மணி 2.20.. கமுக்கமாக வந்து பலே வேலை பார்த்த இரு இளைஞர்கள் - வைரலான CCTV காட்சிகள்!

By Ansgar R  |  First Published Sep 2, 2023, 7:40 PM IST

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள கம்பன் நகர் பகுதிகளில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் திருடு போவதாக புகார் எழுந்துவந்துள்ளது.


இந்த நிலையில் போலீசார் அதை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி நோட்டமிட்டு வந்துள்ளனர். அப்போது தான் இரவு சுமார் 2 மணிக்கு மேல், அந்த பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 

இரு சக்கர வாகனத்தில் வந்த அந்த இரு வாலிபர்கள் முதலில் வாட்டர் கேனை கொண்டு போய் இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் வைத்து, பிறகு பெட்ரோலை திறந்து விட்டு அது நிரம்பியவுடன் மீண்டும் அவர்கள் அந்த பெட்ரோல் கேனை எடுத்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது.

Latest Videos

இந்த காட்சி தற்போது புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். வீடுகளுக்கு வெளியே வாகனங்களை நிறுத்தும்போது அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது. 

ஊழல் திமுக அரசால் நலிவடையும் தென்னை நார் தொழில்: அண்ணாமலை கவலை

click me!