பெண் குழந்தைகளின் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக ரூ.50 ஆயிரம்; தொடங்கி வைத்தார் முதல்வர்

By Velmurugan s  |  First Published Sep 2, 2023, 3:29 PM IST

புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்தும் திட்டத்தினை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.


புதுச்சேரியில் முதல்வராக பொறுப்பேற்ற என்.ஆர்.ரங்கசாமி, புதுவை மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் வங்கிக் கணக்குகளில் 18 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாக ரூ.50 ஆயிரம் செலுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

அதன்படி இந்த திட்டத்தினை அவர் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, “பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” என்ற புதிய திட்டத்தின் கீழ் 38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 50,000/- வீதம்  ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் "சுகன்யா சம்ரிதி"(செல்வமகள்) திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கப்பட்டு வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos

undefined

விசாரணைக்கு பின் முகமலர்ச்சியுடன் வெளியே சென்ற விஜயலட்சுமி; கைது செய்யப்படுகிறாரா சீமான்?

அதன் வங்கி கணக்கு புத்தகத்தை முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.  நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

click me!