புதுச்சேரியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியின் போது சிமெண்ட் ஸ்லாப் இடிந்து விழுந்ததில் வெளி மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தனியார் நிறுவனம் மூலம் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக புதுச்சேரி அடுத்த பத்துக் கண்ணு பகுதியில் பள்ளம் தோண்டும் பணியில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிவபுத்திரா, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அருண்குமார், நைலாஷ் ஆகியோர் பணியில் ஈடுபட்டு இருந்த நிலையில், டிரான்ஸ்பார்மரை தாங்கி நிற்கும் சிமெண்ட் சிலாப்புகள் திடீரென்று சரிந்து விழுந்தது.
மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன்; மதுரையில் வீட்டின் அருகே விளையாடியபோது சோகம்
undefined
இதில் பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மூன்று பேரும் சிமெண்ட் ஸ்லாப்புக்குள் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். இதை அடுத்து பணியில் ஈடுபட்டிருந்த மற்ற தொழிலாளர்கள் விரைந்து சென்று சிமெண்ட் சிலாப்பிற்குள் சிக்கித் தவித்த தொழிலாளிகளை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை; காங். பிரமுகர் மரண வழக்கில் விழி பிதுங்கும் சிபிசிஐடி போலீஸ்
அப்பொழுது மருத்துவமனையில் மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சிவபுத்திரா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு தொழிலாளிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுகுறித்து சேதராப்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.