அதிகரிக்கும் கொரோனாவால் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்... மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Apr 7, 2023, 11:09 AM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரியில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருவதை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அதிவேகத்தில் வந்த கல்லூரி பேருந்து! கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்டு தந்தை, மகன் பலி! பகீர் சிசிடிவி

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம்  என புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க;-  பழனிசாமிக்கு தான் இரட்டை இலை வந்தால்.. அது அதிமுகவுக்கு பிடித்த கெட்ட நேரம்.. டிடிவி.தினகரன் விளாசல்..!

மேலும், கடற்கரை, சந்தை, திரையரங்கம் போன்ற பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

click me!