புதுச்சேரியில் ஏப்.1 முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அம்மாநில மின்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் ஏப்.1 முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்ததாக அம்மாநில மின்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் மின் கட்டணத்தை உயர்த்த மின்துறை முடிவு செய்தது. இதை அடுத்து மின்சார இணை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதனை ஆராயந்து பார்த்த மின்சார இணை ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஒரு விளக்கு திட்டத்தின் கீழ் மாதம் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு ஒரு யூனிட் 1.25 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில் அது 1.45 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் வீடுகளுக்கு தற்போது முதல் 100 யூனிட்டுக்கு 1.90 ரூபாய் மின்சாரக் கட்டணமாக இருந்தது தற்போது ரூ.2.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்க விவகாரம்: டெல்டா பகுதிகளை விட்டுடுங்க.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
101 முதல் 200 வரை யூனிட் பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் 2.90 ரூபாயில் இருந்து 3.25 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு தற்போது வசூலிக்கப்படும் ரூ.5 ரூபாய் மின்கட்டணத்திற்கு பதிலாக ரூ.5.40 பைசா வசூலிக்கப்பட உள்ளது. 300 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் விநியோகிக்கும் வீடுகளுக்கான கட்டணம் 6.45 ரூபாயில் இருந்து 6.80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சுரங்க விவகாரத்தில் தமிழக அரசின் ஆறுதல் காரணங்கள் தேவை இல்லை.! மத்திய அரசை நேரடியாக எதிர்க்கனும்-சீமான்
வர்த்தக ரீதியான பயன்பாடுகளில் குறைந்த மின் இணைப்புகளை பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட் வரை தற்போது வசூலிக்கப்படும் ரூ.5.70க்கு பதிலாக 6 ரூபாயும், 101 முதல் 250 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ.6.75 கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.05 வசூலிக்கப்பட உள்ளது. 251 யூனிட்டுக்கு மேல் உபயோகிப்பவர்களுக்கு ரூ.7.50 கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.80 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டில் உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கான கட்டணம் தற்போது யூனிட்டுக்கு 5.45 ரூபாயில் இருந்து, 5.60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு ஏப்.1 முதல் அமலுக்கு வந்ததாக அம்மாநில மின்துறை அறிவித்துள்ளது.