புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை மீதான கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பாஜக உறுப்பினர் கல்யாண சுந்தரம் பலாப்பழம் வழங்கினார்.
புதுச்சேரியில் நடபாண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசை உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரை, நிதிநிலை அறிக்கை தாக்கல், உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய கூட்டத்தொடர் இன்று வரை நடைபெற்றது. அலுவல் பணிகள் முடிந்தவுடன் சட்டப்பேரவை கூட்டத்தை காலவரையின்றி பேரவை தலைவர் செல்வம் ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ-க்களுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தது இனிமையான பட்ஜெட் என்று கூறும் வகையிலும் பாஜக எம்,எல்.ஏ இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பலாப்பழம் கொடுத்து அசத்தினார்.
புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கல்யாண சுந்தரம். பாஜக எம்.எல்.ஏ-வான இவர் ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் கூட்டத்தொடரின் போதும் தனது தோட்டத்தில் விளைவிக்கப்படும் மணிலா, முந்திரி, வாழை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு வகையான விளைபொருட்களை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டாராக கோவையை கலக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்
அந்த வகையில் இந்தாண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பலா பழத்தை வழங்கினார். இதற்காக அவர் மினி வேனில் பலா பழங்களை ஏற்றிக்கொண்டு சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த அவர் அங்கே வேனை நிறுத்திவிட்டு கட்சி பாகுபாடு இன்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்களையும் அழைத்து அவர்களின் பெயரை எழுதிக் கொண்டு ஒருவருக்கும் ஒரு பலாப்பழத்தை வழங்கி அசத்தினார்.
வாந்தி எடுத்த போது சாக்கடையில் தவறி விழுந்த கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழப்பு
மேலும் இதனை பெற்றுக் கொண்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்திற்கு நன்றியையும் தெரிவித்தனர்.