அரசு விழாவில் தண்ணீர் கூட வழங்காமல் அழைக்களிக்கப்பு; மாற்று திறனாளிகள் வேதனை

By Velmurugan sFirst Published Mar 28, 2023, 5:27 PM IST
Highlights

மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் கொந்தளித்த மாற்றுத்திறனாளிகள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி அரசு சமூகநலத் துறை சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து தொகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் மூன்று சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் தேனி. ஜெயக்குமார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அரியாங்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி, ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி காந்தன், ஆகியோர் கலந்து கொண்டு, 70 லட்ச ரூபாய் செலவில் 87 பேருக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் திலகவதியை பார்த்த மாற்றுத்திறனாளிகள் காலை 9 மணிக்கு வர சொன்னீர்கள் ஒரு தண்ணி பாட்டில் கூட தரவில்லை என்றால் இது என்ன அரசு விழா என்று கேட்டு கொந்தளித்தனர்.

9ம் வகுப்பு சிறுமி கடத்தி பாலியல் வன்கொடுமை; வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதித்து உத்தரவு

மேலும் எப்போது சமூக நலத்துறை சார்பில் அரசு விழா வைத்தாலும் அதிகாரிகளும் அரசும் இதே போல தான் செய்கிறார்கள் நாங்களும் மனிதர்கள் தானே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் சம்பவ இடத்திலிருந்த இணை இயக்குனர் திலகவதி எதையும் கண்டு கொள்ளாமல் அதிகாரிகளிடத்தில் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது சீறிய மாற்றுத்திறனாளிகள் எங்களை படம் பிடிக்க வேண்டாம். அதிகாரிகளை படம் எடுங்கள், நாங்கள் கேட்டால் எந்த பதிலும் சொல்வதில்லை. அப்படியே திரும்பிக் கொள்வார்கள் என்று கூறி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

10 தல படம் வெற்றி பெற முதியோர் இல்லத்தில் கறி விருந்து வைத்த சிம்பு ரசிகர்கள்

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சட்டசபை காவலர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை சமாதானம் செய்து மூன்று சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் சட்டசபை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!