புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் பழக்கடைத் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகேயுள்ள பொறையூரைச் சேர்ந்தவர் பழனி மகன் பிரதீஷ் (வயது 23). இவர் அப்பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியைக் காதலித்து கல்யாணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்தநிலையில், கடந்த 2021ம் ஆண்டு சிறுமியை வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிரதீஷ் அங்கு அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை சிறுமி வெளியில் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அருகில் இருந்த பாட்டிலைக் கொண்டு சிறுமியைப் தாக்கி கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை சாக்கு மூடையில் கட்டி வீசி விட்டுத் தப்பிவிட்டார்.
கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பிரதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதீஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அளித்து நீதிபதி ஜெ.செல்வநாதன் உத்தரவிட்டார்.
தந்தையைின் சடலத்திடம் ஆசி பெற்று தேர்வு எழுதச்சென்ற மாணவன்; திண்டுக்கலில் நிகழ்ந்த சோகம்