புதுவையில் சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தை மாயமான விவகாரத்தில் கொள்ளையர்கள் 1 மணி நேரம் காத்திருந்து குழந்தையை கடத்திச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இருவரும் இளநீர், பாப்கார்ன், குழந்தைகள் பொம்மை, பலூன் ஆகியவற்றை வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 1/2 வயதில் அக்ஷயா என்ற பெண் குழந்தையும், 2 1/2 மாதத்தில் ஆதித்யா என்ற ஆண் குழநதையும் உள்ளனர்.
இருவரும் குழந்தைகளுடன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு நள்ளிரவில் வீட்டிற்கு செல்வர். சில நேரங்களில் நள்ளிரவை தாண்டிவி்ட்டால், பிளாட்பாரத்திலேயே தங்கி விடுவது வழக்கம். இதனிடையே வீரபிராதப்பிற்கும், அவரது மனைவி மனைவிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சோனியா மிஷின் வீதியில் உள்ள ஒரு வாகன வாடகை விடும் கடையின் வாசலில் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார்.
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவே பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசுகிறது - துரை வைகோ
காலை எழுந்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த ஆதித்யாவை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சோனியா பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் குழந்தையை தூக்கி செல்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த வாலிபரையும், கடத்தப்பட்ட குழந்தையையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர். இந்த நிலையில் வழக்கு பதிவு செய்த பெரிய கடை போலீசார் அங்கிருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் ஆண் வேடம் அணிந்த பெண் ஒருவர் தலையில் குல்லா அணிந்தும் முகமூடி அணிந்து கொண்டும் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் அவரை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் புதுச்சேரியில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.