புதுச்சேரியில் சாலையில் உறங்கிய 2 மாத குழந்தை கடத்தல்; தாய் கதறல்

By Velmurugan s  |  First Published Jun 28, 2023, 3:38 PM IST

புதுச்சேரியில் சாலையோரம் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 2 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வீரபிரதாப். இவரது மனைவி சோனியா. இவர்கள் கடற்கரை மற்றும் சாலையோரம் இளநீர், சோளம், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 3 வயதில் பெண் குழந்தையும், 2½ மாதங்களேயான ஆதித்யா என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இவர்கள் மிஷின் வீதியில் உள்ள ஜென்மராகினி கோவில் அருகே சாலையோர உள்ள பைக் வாடகைக்கு விடும் கடை வாசலில் படுத்து தூங்குவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு தனது குழந்தையுடன் சாலையோரம் படுத்து தூங்கினர். ஆனால் காலையில் பார்த்த போது குழந்தை ஆதித்யாவை காணவில்லை. இதனால் அவர்கள் திடுக்கிட்டனர். 

Latest Videos

புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்; ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று திரண்டதால் பரபரப்பு

அங்குள்ள பல இடங்களில் தேடி பார்த்தனர். எங்கும் குழந்தை கிடைக்கவில்லை. குழந்தையை மர்ம கும்பல் யாரோ கடத்தி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சோனியா பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடபாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Crime News Today: மது போதையில் தம்பியை போட்டு தள்ளிய அண்ணன் கைது; திருவாரூரில் பரபரப்பு

click me!