தமிழகத்தைப் போன்று புதுச்சேரியிலும் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமியிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் வி.சி.க எம்.பி ரவிக்குமார் இன்று சந்தித்து மனு ஒன்றினை அளித்தார். அந்த மனுவில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்ஃப் துறையின் கீழ் காரைக்கால் மாவட்டத்தில் 49; ஏனாம் மாவட்டத்தில் 3; புதுச்சேரி மாவட்டத்தில் 179 ஆக மொத்தம் 231 திருக்கோயில்கள் உள்ளன.
அவை இந்து சமய நிறுவனங்கள் சட்டம் 1972 மற்றும் விதிகள் 1975 -ன் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன. இந்தத் திருக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் 5 அறங்காவலர்கள் கொண்ட வாரியம் உள்ளது. அந்த அறங்காவலர்களில் பட்டியல் சமூகத்தவர் ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்படவேண்டும் என இந்த சட்டத்தின் பிரிவு 4 (1) இல் கூறப்பட்டுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்களை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: புதுவையில் பரபரப்பு
பெண் ஒருவரும் அறங்காவலராக நியமிக்கப்படுகிறார் என அறிய முடிகிறது. இவ்விதத்தில் இந்தத் திருக்கோயில்கள் மக்களாட்சி மாண்புடன் நிர்வகிக்கப்படுவதாக பாராட்டுதல் தெரிவிக்கப்பட்டது. திருக்கோயில்களில் பேதங்களை அகற்றும் விதமாக சாதி அடிப்படையிலின்றி அர்ச்சகர்களைத் தகுதியின் அடிப்படையில் நியமிக்கும் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றப்பட்டிருப்பதுபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு வகை செய்யும் சட்டம் ஒன்றை எதிர்வரும் கூட்டத் தொடரில் நிறைவேற்றவேண்டும் என அந்த மனுவில் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
20 ஆயிரம் பேருக்கு 1 கழிவறையா? மதுரை பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மத்திய குழு
தமிழ்நாடு அரசால் துவக்கப்பட்டிருப்பதுபோல அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை புதுச்சேரி அரசும் துவக்கி ஆர்வமுள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும். அதுவரை தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் புதுச்சேரியைச்சேர்ந்தவர்கள் பயில்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் ரவிக்குமார் கோரியுள்ளார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள திருக்கோயில்களில் எந்தத் தடையுமின்றி அனைவரும் வழிபடுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழிபாட்டு சமத்துவத்தை உறுதிசெல்லவேண்டு எனவும் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.