புதுச்சேரியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜான் குமார், இவரது மகன் ரிச்சர்ட் ஜான் குமார் இவர் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இந்த நிலையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் மூலம் உறவினர்களுக்கு பட்டா மாற்றம் செய்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாரை கைது செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் உள்ள சமூக நல அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பத்திர பதிவுக்கு துணை போன அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோன்று நெல்லித்தோப்பு தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொகுதியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் சட்டமன்ற உறுப்பினர் செய்யவில்லை, மேலும் எம்எல்ஏ-வை தொகுதி பக்கமே பார்க்க முடியவில்லை கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலைகள் போடவில்லை, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை, கழிவு நீர் வாய்க்கால் செப்பனிடப்படவில்லை, மின் பற்றாக்குறை உள்ளது.
undefined
20 ஆயிரம் பேருக்கு 1 கழிவறையா? மதுரை பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த மத்திய குழு
மின்கம்பங்கள் புதுப்பிக்கப்படவில்லை, இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து புதுச்சேரி திமுக சார்பில் நெல்லித்தோப்பு தொகுதி திமுக பிரமுகர் கார்த்திகேயன் தலைமையில் கருப்பு கொடி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில அமைப்பாளர் சிவா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
மீண்டும் பழைய பார்முக்கு திரும்பும் அரிசி கொம்பன்; வீடியோ வெளியிட்டு வனத்துறை மகிழ்ச்சி
புதுச்சேரியில் ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான ஜான் குமார் மற்றும் இவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகிய இரண்டு பேரையும் கண்டித்து ஒரே நேரத்தில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.